பப்புவா நியூ கினி
Independent State of Papua New Guinea பப்புவா நியூ கினி | |
|---|---|
| குறிக்கோள்: 'வேற்றுமையில் ஒற்றுமை'[1]:52 | |
| நாட்டுப்பண்: "ஓ, புதல்வர்களே, எழுந்திருங்கள்!"[2][3] | |
அமைவிடம்: பப்புவா நியூ கினி (பச்சை) | |
| தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | மார்சுபி துறைமுகம் 09°28′44″S 147°08′58″E / 9.47889°S 147.14944°E |
| அதிகாரபூர்வ மொழிகள் |
|
பூர்வீக மொழிகள் | 839 மொழிகள்[5] |
| சமயம் (2011)[6] |
|
| மக்கள் | பப்புவா நியூ கினியர் |
| அரசாங்கம் | ஒற்றையாட்சி நாடாளுமன்ற அரசியல்சட்ட முடியாட்சி |
• மன்னராட்சி | ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசு |
• தலைமை ஆளுநர் | பொப் டாடே |
• பிரதமர் | யேம்சு மராப்பே |
| சட்டமன்றம் | தேசிய நாடாளுமன்றம் |
| விடுதலை ஆத்திரேலியாவிடம் இருந்து | |
• பப்புவா ஆள்புலம் | 1 செப்டம்பர் 1906 |
• நியூ கினி ஆள்புலம் | 19 மே 1921 |
• நிர்வாக இணைவு | 1 சூலை 1949 |
• சுயாட்சி | 1 திசம்பர் 1973 |
• விடுதலை | 16 செப்டம்பர் 1975 |
| பரப்பு | |
• மொத்தம் | 462,840 km2 (178,700 sq mi) (54-ஆவது) |
• நீர் (%) | 2.2 |
| மக்கள் தொகை | |
• 2021 மதிப்பீடு | |
• 2024 கணக்கெடுப்பு | 10,185,363[9] |
• அடர்த்தி | 25.5/km2 (66.0/sq mi) |
| மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2025 மதிப்பீடு |
• மொத்தம் | |
• தலைவிகிதம் | |
| மொ.உ.உ. (பெயரளவு) | 2025 மதிப்பீடு |
• மொத்தம் | |
• தலைவிகிதம் | |
| ஜினி (2009) | 41.9[11] மத்திமம் |
| மமேசு (2023) | மத்திமம் · 160-ஆவது |
| நாணயம் | கினா (PGK) |
| நேர வலயம் | ஒ.அ.நே+10, +11 (PNGST) |
| வாகனம் செலுத்தல் | இடது |
| அழைப்புக்குறி | +675 |
| ஐ.எசு.ஓ 3166 குறியீடு | PG |
| இணையக் குறி | .pg |
பப்புவா நியூ கினி அல்லது அதன் முழுப்பெயராக பப்புவா நியூ கினி சுதந்திர நாடு (Independent State of Papua New Guinea) என அழைக்கப்படும் இந்நாடு ஓசானியாவிலுள்ள (பெருங்கடலிட நாடுகளில் உள்ள) நியூகினித்தீவின் கிழக்கு அரைவாசியையும் (மேற்கு அரைவாசி இந்தோனேசியாவின் ஆளுகைக்குட்பட்ட மேற்கு பப்புவா மற்றும் இரியன் ஜெயா மாகாணங்களைக் கொண்டது) மற்றும் பல தீவுகளையும் கொண்டது.[13]
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து மெலனேசியா என அழைக்கப்படும் பசுபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது. இந்நாட்டின் மிகச்சிறிய எண்ணிக்கையிலுள்ள நகரங்களிலொன்றான போர்ட் மோர்ஸ்பி இதன் தலைநகராகும். இந்நாட்டின் முடிக்குரிய அரசராக மூன்றாம் சார்லசும், ஆளுநராக பாப் தாடேவும், பிரதம மந்திரியாக ஜேம்ஸ் மராபும் உள்ளனர்.
மக்கட்பரம்பல்
[தொகு]உலகிலுள்ள மிகவும் பன்முகத்தன்மையுடைய நாடுகளில் இந்நாடும் ஒன்றாகும். மக்கள் தொகை 5 மில்லியனே உள்ள இந்நாட்டில் 850 இற்கும் மேற்பட்ட ஆதிக்குடிவாசிகளின் மொழிகளும் குறைந்தது அதே எண்ணிக்கையுடைய பழங்குடிக் குழுக்களும் பரம்பியுள்ளன. இந்நாடு அதிகமாக கிராமங்களைக் கொண்டது. 18 சதவீதமான மக்களே நகர்ப்புறத்தில் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் பாரம்பரிய சமுதாயத்திலேயே வாழ்வதுடன் அன்றாட உணவுத் தேவைக்கு மட்டுமே விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். இப்பாரம்பரிய சமுதாயங்களுக்கும் அவற்றின் சந்ததிகளுக்கும் இந்நாட்டின் சட்டங்களினால் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.
புவியியல் அமைப்பு
[தொகு]இந்நாட்டின் புவியியலும் மிகவும் பரந்த பன்முகத்தன்மை கொண்டது. நடுவே மலைகளும் உயர்நிலங்களையும் தாழ்நிலங்களில் அடர்த்தியான மழைக்காடுகளையும் கொண்ட இந்நாட்டின் தரைத்தோற்ற அமைப்பு போக்குவரத்துக் கட்டுமானங்களை வளர்த்தெடுக்க மிகவும் சவாலாக விளங்குகிறது. சில இடங்களுக்கு விமானம்(வானூர்தி) மூலம் மட்டுமே போய்வர முடியும். 1888 இல் இருந்து மூன்று வேற்று நாட்டவர்களின் ஆளுகைக்குட்பட்ட பின்னர் 1975 ஆம் ஆண்டு பப்புவா நியூ கினி அவுஸ்திரேலியாவிடமிருந்து சுதந்திரம் (முழு விடுதலை) பெற்றுக்கொண்டது.
இதனையும் காண்க
[தொகு]- மேற்கு பப்புவா, இந்தோனேசியாவின் மாகாணம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Benjamin Reilly (2004). "Ethnicity, democracy and development in Papua New Guinea". Pacific Economic Bulletin 19 (1): 46–54. https://openresearch-repository.anu.edu.au/server/api/core/bitstreams/307eaa9d-07f9-4cff-bd45-5ec40f5e1dea/content.
- ↑ "Never more to rise". The National. 6 February 2006. Archived from the original on 13 July 2007. Retrieved 19 January 2005.
- 1 2 "Papua New Guinea". த வேர்ல்டு ஃபக்ட்புக். Langley, Virginia: நடுவண் ஒற்று முகமை. 2012. Archived from the original on 12 April 2021. Retrieved 5 October 2012.
- ↑ "Sign language becomes an official language in PNG". Radio New Zealand. 21 May 2015 இம் மூலத்தில் இருந்து 28 May 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150528060527/http://www.radionz.co.nz/international/pacific-news/274199/sign-language-becomes-an-official-language-in-png.
- ↑ Papua New Guinea பரணிடப்பட்டது 3 சூலை 2013 at the வந்தவழி இயந்திரம், Ethnologue
- ↑ Koloma, Roko; Kele, Hajily. "Papua New Guinea 2011 National Report-National Statistical Office". sdd.spc.int. Archived from the original on 12 August 2017. Retrieved 2 September 2016.
- ↑ Waide, Scott (13 March 2025). "Papua New Guinea declares Christian identity in constitutional amendment". https://www.rnz.co.nz/news/pacific/544665/papua-new-guinea-declares-christian-identity-in-constitutional-amendment.
- ↑ "Population | National Statistical Office | Papua New Guinea". Archived from the original on 20 July 2023. Retrieved 20 July 2023.
- ↑ 2024 National Population Census Final Figures (Report). Government of Papua New Guinea – via United Nations Population Fund in Papua New Guinea.
- 1 2 3 4 "World Economic Outlook Database, April 2025". International Monetary Fund. April 2025. Retrieved 24 June 2025.
- ↑ "GINI index (World Bank estimate)". data.worldbank.org. உலக வங்கிக் குழுமம். Archived from the original on 7 April 2019. Retrieved 23 February 2019.
- ↑ Conceição, Pedro (2025). Human Development Report 2025. United Nations Development Programme. p. 276. ISBN 9789211542639. ISSN 2412-3129.
- ↑ Papua New Guinea country profile
